Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டு சந்தையில் குவிந்த வியாபாரிகள்: பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை…! (வீடியோ இணைப்பு)

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் பிரசித்தி பெற்ற சமயபுரம் ஆட்டுச் சந்தையில் இன்று 26-10-2024 சனிக்கிழமை வியாபாரிகளும், ஆடு வளர்ப்போர்களும் குவிந்தனர். ஆடு  வளர்ப்போர் தாங்கள் வளர்த்த ஆடுகளை சந்தைக்கு அழைத்து வந்திருந்தனர். வியாபாரிகள் ஆடுகளை பார்த்து வாங்கினர். சந்தையில் ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.  அந்தவகையில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சமயபுரம் ஆட்டு சந்தை சேறும்- சகதியுமாக காணப்பட்டது.  கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை  வசதிகளும் இல்லாததால் வியாபாரிகள், ஆடு வளர்ப்போர் பெரிதும் சிரமப்பட்டனர்.  ஆட்டு சந்தையை ஒப்பந்தம் எடுத்தவர்களும், சமயபுரம் பேரூராட்சி நிர்வாகமும் இதனை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்