Rock Fort Times
Online News

மதுராந்தகத்தில் மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு:* திருச்சி மாவட்டத்திலிருந்து ஒரு லட்சம் பேர் பங்கேற்பது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம், மாநகர பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி – தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை அருகில் உள்ள டி.எம்.ஆர் ரெசிடென்சியில் திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம் தலைமையில் இன்று(11-03-2025) நடைபெற்றது. மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர் வரவேற்றுப் பேசினார். மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், மாவட்ட பொருளாளர் வெங்காயமண்டி தங்கராஜ், மாநகர செயலாளர் ஏஒன் ஹோட்டல் வி.பி.ஆறுமுகப் பெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி. ஹக்கீம், மாநகர இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ்.மைதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு ஆகியோர் மே 5 – ந் தேதி நடக்கும் வணிகர் தின மாநில மாநாடு குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே.5 -ந் தேதி 42 -வது வணிகர் தினம் வணிகர் அதிகார பிரகடன மாநாடாக செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். மத்திய ,மாநில அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் அனைவரும் அணி, அணியாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு பேசுகையில், மதுராந்தகத்தில் நடக்கப் போகும் மாநாட்டில் நமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் விதமாக லட்சக்கணக்கான வணிகர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுராந்தகத்தில் நடக்கும் மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாட்டில் திருச்சி மாவட்டத்திலிருந்து ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் கே.எம்.எஸ்.ஹக்கீம், என். ரங்கநாதன், தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு சங்கத்தின் மாநில தலைவரும், பேரமைப்பு மாநில துணைத்தலைவருமான கந்தன், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்ரீ ராம குமார், மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் தில்லை மெடிக்கல் மனோகரன், பேரமைப்பு மாநில இணைச்செயலாளர் காந்தி மார்க்கெட் எம்.கே.எம் .காதர் மைதீன், திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கத்தின் தலைவர் வெள்ளையப்பன், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் நல்லுசாமி மற்றும் பேரமைப்பு மாநில இணைச்செயலாளர்கள் திருப்பதி ஸ்டில்ஸ் எம்.திருப்பதி, ராஜாங்கம், கமலக்கண்ணன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர், செய்தி தொடர்பாளர் திருமாவளவன், திருச்சி மாநகரப் பொருளாளர் ஜானகிராமன், டோல்கேட் ரமேஷ், மாவட்டம் ரஹீம் மற்றும் திரளான வணிகர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் மாவட்ட செயலாளர் செந்தில் பாலு நன்றி கூறினார். கூட்டம் முடிந்தபின் இன்று( மார்ச் 11) பிறந்தநாள் காணும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலுவிற்கு மாநில தலைவர் விக்கிரமராஜா மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், வியாபார பெருமக்கள் அனைவரும் மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்