Rock Fort Times
Online News

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி, பி.எப் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் சார்பில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சந்தாதாரர் மற்றும் 1995 -ல் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் குறைபாடுகளை எளியமுறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்து வைக்க வலியுறுத்தி எல்.பி.எப், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.என்.டி.யூ.சி, எச்.எம்.எஸ், ஏ.ஐ.சி. சி.டி.யூ, எல்.எல்.எப், யூ.டி.யூ.சி, தொ.மு.ச. போன்ற தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று(08.04.2025) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சி.ஐ.டி.யூ ரெங்கராஜன் பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி சுரேஷ், ஐ.என்.டி.யூ.சி வெங்கட் நாராயணன், எச்.எம்.எஸ்.ஜான்சன், ஏ.ஐ.டி.யூ.சி ஞான தேசிகன், எல்.எல்.எப் தெய்வீகன், யூ.டி.யூ.சி சிவசெல்வம், தொ.மு.ச.மாநில செயலாளர் எத்திராஜ், சி.ஐ.டி.யு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பி.எப் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்