ஆடி அமாவாசை நாளில் முன்னோர் களின் ஆத்மாக்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினருக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம். இந்தநாளில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் (நீர் மற்றும் எள் கொண்டு செய்யப்படுவது) மற்றும் பித்ரு பூஜைகள் செய்து அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆடி அமாவாசை வழிபாடு, பூஜைகள் செய்யப்படுகிறது. முன்னோர்களை எல்லா நாட்களிலும் வழிபடுவது நல்லது. இயலாதவர்கள் அமாவாசை நாட்களிலாவது வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசைகளி லாவது வழிபட வேண்டும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை (ஜூலை 24) வியாழக்கிழமை வருகிறது. நாளை அதிகாலை 1:48 மணி முதல் அமாவாசை திதி துவங்கி, ஜூலை 25ம் தேதி அதிகாலை 1 மணி வரை அமாவாசை திதி உள்ளது. நாளை வியாழக்கிழமை என்பதால் காலை 6 முதல் 7-30 மணி வரை எமகண்டமும், பகல் 1-30 முதல் 3 மணி வரை ராகு காலமும் உள்ளது. இதனால் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை 7- 30 மணிக்கு பிறகு கொடுப்பது சிறப்பு. அதேபோல பகலில் படையலிட்டு முன்னோர்களுக்கு படைத்து வழிபடுபவர்கள் பகல் 1-20 மணிக்கு முன்பாக படைத்து விட வேண்டும்.
Comments are closed.