காவிரி நீரை பெறுவதில் தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரசும் போராடும்….
திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி...
திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மக்கள் குறை கேட்பு முகாமை நடத்தினார். இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 22, 23, 24, 26, 27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்தனர். இந்த முகாமில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞா் கோவிந்தராஜன், மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞா் சரவணன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ், கவுன்சிலர் சோபியா விமலாராணி, புத்தூர் சார்லஸ், பட்டேல் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதன் பின்னர் திருநாவுக்கரசர் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களில் பங்கெடுக்கும். எந்த அரசியல் கட்சியாலும் காவிரி பிரச்சினையை பேசி தீர்க்க முடியாது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள சட்டப்படியான தீர்ப்பின் அடிப்படையில் மட்டுமே காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. அப்பிரச்சனை வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்காது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.