Rock Fort Times
Online News

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றுடன்(27-05-2025) நிறைவு பெறுகிறது. கடந்த வாரம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்ந்து உயர் கல்வியை தொடர ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநிலத்தில் மொத்தம் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதுவரை இளங்கலை படிப்புகளுக்கு 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி அரசு கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்