தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பிரிவுகளில் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் குறைந்தபட்ச கல்வித்தகுதியுடன் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 3,935 பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 25ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. விருப்பம் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (மே 24) முடிவடைகிறது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்யும்போது இணைய பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.