டிஎன்பிஎஸ்சியின் 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு அட்டவணை டிசம்பர் 15-ம் தேதி அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது என்றும், 15 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி ஒவ்வொரு ஆண்டு இறுதியில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.