டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வருகின்றன. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நியமிக்கப்படலாம் என்ற பேச்சு பரவலாக இருந்தது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவும், 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்து தமிழக ஆளுநருக்கு பட்டியல் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசின் பரிந்துரை பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். மேலும், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.