தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற சட்ட விதிப்படி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணக்குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார் பொருளாதார வல்லுநர் முனைவர் பிரேம்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்கள் 6 வருடம் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.