Rock Fort Times
Online News

திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் தீர்ந்தன…

திருமலை ஏழுமலையான் கோயிலில் டிசம்பா் 23 முதல் ஜனவரி 1 வரை 10 நாள்களுக்கு பக்தா்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனம் என்று அழைக்கப்படும் சொா்க்கவாசல் தரிசனம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதையொட்டி, டிசம்பா் 23-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 24-ஆம் தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வைகுண்ட வாயில் 10 நாள்கள் தரிசனத்தை முன்னிட்டு டிசம்பா் 22 முதல் 24, டிசம்பா் 31 மற்றும் ஜனவரி 1 வரை ஏழுமலையான் கோயிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சகஸ்ர தீபாலங்கார சேவை பக்தா்களின்றி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டும் நேரில் வரும் புரோட்டோகால் விஐபிக்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாள்கள் வரை விஐபி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தேவஸ்தானம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் தீர்ந்தன. இதனால், ஜன. 1 ஆம் தேதி வரை ஏழுமலையானை வழிபடுவதற்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் தீர்ந்தன. இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் ரூ. 300 தரிசன டிக்கெட்கள் இல்லாமல் ஜனவரி 1 ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 916

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்