Rock Fort Times
Online News

இந்தா பிடி திருப்பதி தரிசன டிக்கெட் ! ஆந்திர பேருந்துகளில்அதிரடி!

திருமலை தரிசனம் குறித்த ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு:
ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருமலைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் தினமும் 1000 தெய்வீக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் திருமலைக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த பொன்னான வாய்ப்பை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வழங்கியுள்ளனர். ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழக (ஏ பி எஸ் ஆர் டி சி)பேருந்துகளில் திருப்பதிக்கு செல்லும் பயணிகள், கட்டணத்துடன் கூடுதலாக 300 ரூபாய் செலுத்தி பேருந்திலேயே விரைவு தரிசன டிக்கெட்டைப் பெறலாம். இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11. மணிக்கும் மாலை 4. மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் RTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள். எனவே, திருப்பதி செல்லும் பயணிகள் முதலில் ஆர்டிசி பஸ்களில் விரைவு தரிசன டிக்கெட் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். திருப்பதிக்கு தினமும் 650 பேருந்துகளை APSRTC இயக்குகிறது. திருப்பதிக்கு ஒவ்வொரு டெப்போவிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. பெங்களூர், சென்னை, காஞ்சி, வேலூர், பாண்டிச்சேரி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து தெய்வீக தரிசனத்திற்காக வரும் பயணிகளுக்கு இது மிகவும் நல்ல வசதி

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்