Rock Fort Times
Online News

திருச்சி ஜங்ஷன் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் பங்கேற்பு…!

திருச்சி மாநகர் மாவட்ட ஜங்ஷன் பகுதி அதிமுக நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர்  மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி  பேசும்போது வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வருகின்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி  முதலமைச்சராக பாடுபட வேண்டும் என்று பேசினார்.  கூட்டத்தில் முன்னாள் அரசு கொறடா, அமைப்பு செயலாளர் மனோகரன் பேசுகையில், திமுக குடும்ப ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் அதிமுக ஏழை மக்களுக்கான ஆட்சியை நடத்தி வந்தது.இன்றைக்கு திமுக ஆட்சியால் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.இவர்களுக்கு வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.  மேற்கு தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்று உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு தொகுதியில்  வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.அடுத்து அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையில் அமைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று பேசினார்.  கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் பேசும்போது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி கரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் ஜோதிவாணன், அரவிந்தன், நிர்வாகிகள் கே.சி பரமசிவம், ஐயப்பன், ஜாக்குலின், பத்மநாதன், வனிதா, நசீமாபாரிக், வெல்லமண்டி பெருமாள், கலீலுல் ரஹ்மான், சகாபுதீன், வெங்கட்பிரபு, அன்பழகன், சுரேஷ் குப்தா, ரோஜர், ராஜேந்திரன், கலைவாணன், பூபதி, எம்ஆர்ஆர் முஸ்தபா, ஜோசப் ஜெரால்டு, அப்பாஸ், இலியாஸ், பாலாஜி, முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகர், வக்கீல் முத்துமாரி, நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்திரன், பெருமாள், ஒத்தக்கடை மகேந்திரன், மோகன், முத்துக்குமார், கணேஷ், கதிர்வேல், காமராஜ், ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி செய்திருந்தார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்