Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூரில் புதிய காய்கறி மார்க்கெட் நடைமுறைக்கு வரும் வரை காந்தி மார்க்கெட் தற்போது இருக்கும் நிலையிலேயே தொடரும்… * வியாபாரிகள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கறி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் கமிட்டி கூட்டம் தலைவர் கே.டி.தங்கராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் கே.ஏ.எச்.ஜமால் முகமது வரவேற்றார். பொருளாளர் எம்.காதர் மைதீன், அவைத் தலைவர் யூ.எஸ்.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஆர்.சீனிவாசன், எப்.பதுருல்லா, பி.ஏ.எச்.முகமது ஹனிபா, ஏ.எம்.எப். முகமது பாரூக், ஆலோசகர் பி.கே.எஸ்.அப்துல் மாலிக், பி.சிவா, எஸ்.பார்த்தசாரதி, ஆர்.ஜி.சந்திரன், கே.டி.சீனிவாசன்,
பி. கௌதம், ஏ.தனபால், எஸ்.எம்.யூசுப் அலி, ஜி.எம்.கே. கிருஷ்ணமூர்த்தி, ஏ.எம்.பி.மைதீன் பிச்சை, எஸ்.ராஜ் முகமது, பி.விநாயகமூர்த்தி, எஸ்.கண்ணன், பி.தண்டாயுதபாணி மற்றும் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- திருச்சி காந்தி மார்க்கெட்டில் 70 ஆண்டு காலமாக மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைமுறையில் இருப்பதை தனித்தனியாக பிரிப்பது என்பது திருச்சி காந்தி மார்க்கெட்டை பொருத்தவரை இயலாத காரியம் ஆகும். காந்தி மார்க்கெட்டை சுற்றி பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் நலன் கருதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் தினசரி சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தையும், போக்குவரத்து காவல்துறையையும் கேட்டுக்கொள்வது. திருச்சி மாநகராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிதாக ஏற்படுத்தி இருக்கும் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உருவாக உள்ள புதிய காய்கறி மார்க்கெட் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் காந்தி மார்க்கெட்டின் அனைத்து வியாபாரிகளின் மேலான ஆலோசனைகளை கேட்டறிந்து அதன் அடிப்படையில் மொத்தம், சில்லறை வியாபாரிகள் என முறைப்படுத்தி முயற்சிப்பது,மற்ற சங்கங்களின் வியாபார விஷயங்களிலோ தனி மனித வியாபார சுதந்திரத்திலோ யாரும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவும், தெரிவிக்கவும் முடியாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வியாபாரிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் எங்கள் சங்கம் அஞ்சாது. பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஏற்பட இருக்கும் புதிய காய்கறி மார்க்கெட் நடைமுறைக்கு வரும் வரை காந்தி மார்க்கெட் இப்பொழுது இருக்கும் நிலையே தொடரும் எனவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்வது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்