Rock Fort Times
Online News

தஞ்சையில் பரபரப்பு: திமுக விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் 300 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை…!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாய அணி மாநில செயலாளராக இருந்து வருபவர் ஏ.கே.எஸ்.விஜயன். இவரது வீடு தஞ்சாவூர், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகரில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியூர் சென்றிருந்த ஏ.கே.எஸ். விஜயனின் குடும்பத்தினர் இன்று( டிச.1) காலை மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசரின் முதற்கட்ட விசாரணையில், ஏகேஎஸ் விஜயன் வீட்டில் இருந்த சுமார் 300 பவுன் தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும் ரொக்கமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். திமுக நிர்வாகி வீட்டில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்