திருச்சி, ஸ்ரீரங்கம் போலீசார் கொள்ளிடக்கரை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு ஜேசிபி எந்திரங்களுடன் சிலர் மணல் அள்ளி கடத்த முயன்றது தெரிய வந்தது. உடனே, போலீசார் மணல் திருடிய மூன்று பேரை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருவானைக்காவலை சேர்ந்த மாணிக்கம், திவாகர், மண்ணச்சநல்லூரை சேர்ந்த செல்வராஜ், என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார்
மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஜேசிபி எந்திரங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இளையராஜா என்பவரை தேடி வருகின்றனர்.

Comments are closed.