பதவியேற்பு விழா மேடையில் பல லட்சங்களில் குவிந்த நன்கொடை ! – திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நலச்சங்கத்தின் நீண்டநாள் கனவு நிஜமான நெகிழ்ச்சி சம்பவம் !
சங்கத்திற்கென சொந்தமாக இடம் வாங்கி கட்டிடம் கட்ட வேண்டும் என்கிற உறுப்பினர்களின் பல வருட கனவை நிறைவேற்ற, பதவியேற்பு விழா மேடையிலேயே பல லட்சங்கள் நன்கொடையாக குவிந்த சம்பவம், திருச்சிராப்பள்ளி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நலச் சங்கத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனை செய்பவர்களின் நலனுக்காக, கடந்த 2015ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் திருச்சிராப்பள்ளி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம். இச்சங்கத்தில் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதன்படி 2025 – 2028ம் ஆண்டுக்கான தலைவர், பொருளாளர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களுக்கான பதவியேற்பு விழா திருச்சி, கலைஞர் அறிவாலயம் பின்புறமுள்ள ராசி மஹாலில் இன்று (பிப்.20ம்தேதி ) நடைபெற்றது. இதில் திருச்சியின் மூத்த கல்வி ஆலோசகர்களில் ஒருவரும் ஒமேகா கோச்சிங் சென்டரின் நிறுவனருமான தவே சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.இதன்பின் தலைவராக கே.ஜே சுரேஷ் பாபு என்கிற சுகந்தி ராஜா, செயலாளராக ஏ.ஜேம்ஸ், பொருளாளராக ஆர்.ராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக 23 பேர் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
சங்கத்திற்காக இடம் வாங்கி சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும் என்பது சங்க உறுப்பினர்களின் பல வருட கனவு. இதை நிறைவேற்ற தலைவராக பொறுப்பேற்ற சுகந்தி ராஜா சிறப்பான முயற்சியை முன்னெடுத்ததோடு, பதவியேற்பு விழா மேடையிலேயே புதிய கட்டிடம் கட்ட தனது பங்களிப்பாக ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். தலைவரே நன்கொடை வழங்குவதை பார்த்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற தொகையை வழங்கினார்கள். அதன்படி சங்கத்தின் கௌரவத்தலைவர்களான காமராஜ் 50 ஆயிரமும்,பாண்டியன் 10. ஆயிரமும், ஜி.பி.டி கார்ஸ் கணேசன் ரூ.1 லட்சம், சங்க பொருளாளர் ஏ.ஜேம்ஸ் ரூ.50 ஆயிரம், வி.பி.எம் ராஜா 40 ஆயிரம், ராயன், பீர் முகமது,இன்ஃபன்ட் ராஜ், நடராஜன், ஜான்சன், விக்னேஸ்வர், ரஃபீக் முகமது, சங்கர், சக்தி கோவைஸ் உரிமையாளர் சக்தி, புகழேந்தி, அப்துல் ஹக்கீம், பிரபாகர், பிரகாஷ், நந்தகுமார், அஸ்ஸாம், ராக்போர்ட் கார்ஸ் ராஜா, மற்றும் கணேசன் ஆகியோர் தலா ரூ.25 ஆயிரமும், ராஜா ரூ.10 ஆயிரம் என மொத்தம் சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சில நிமிடங்களில் நிர்வாகிகளால் நன்கொடையாக விழா மேடையிலேயே வழங்கப்பட்டது. சங்கத்தின் நிர்வாகிகளாக பொறுப்பேற்றோமோ,அலட்டிக் கொள்ளாமல் சங்கத்தின் பெயரையும் பதவியையும் வைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்தோமா என்றில்லாமல், உள்ளன்போடு சங்க நலனுக்காகவும், சங்க உறுப்பினர்களின் மேம்பாட்டிற்காகவும் திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்கத்தின் தலைவர் சுகந்தி ராஜா மற்றும் நிர்வாகிகள் முன்னெடுத்த இந்த சிறப்பான முயற்சி அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.
சங்க கட்டிடம் கட்டுவதற்கான சிறப்பான முன்முயற்சியை மேற்கொண்ட திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சுகந்தி ராஜாவை நீங்களும் பாராட்ட நினைத்தால் இதுதான் அவரது செல்போன் எண் : 98424 42525
Comments are closed.