முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.30) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், மதுரை கப்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துரோகிகளால்தான் 2021-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போய் விட்டது. கட்சியில் நடந்த உள்குத்து வேலைகளால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியவில்லை. ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் மூன்று பேருமே தி.மு.க.வின் பிடீம் போன்று செயல்படுகிறார்கள். அவர்கள் 3 பேர் இல்லாத நிலையில், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. பலவீனமடைந்து விட்டது என கூறுவது தவறு. அவர்கள் 3 பேர் ஒன்றிணைவது பற்றி பேசுவதே வீண் என்றார். இதேபோன்று, செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்த களைகள் அகற்றப்பட்டு உள்ளன. அதனால், அ.தி.மு.க. நன்றாக செழித்து வளரும். அடுத்து ஆட்சி அமைக்கும். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க.வின் கோட்டையிலேயே, செங்கோட்டையனால் வெற்றி பெற முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

Comments are closed.