தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தலைமை கழகம் இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இம்முறை தொகுதி மாறி போட்டியிடவுள்ளனர். கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய சி.வி.சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், கடந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய கே.டி.ராஜேந்திர பாலாஜி இந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

Comments are closed.