Rock Fort Times
Online News

இந்தியாவில் இந்த ரயிலில் மட்டும்தான் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது..! எந்த ரயில்? ஏன் தெரியுமா?

பொதுவாக ரயில் பயணங்கள் அனைவருக்கும் பிடிக்கும். மலைகள், இயற்கை காட்சிகள் ஆகியவற்றை ரசித்துக் கொண்டே பயணிக்க மக்கள் விரும்புகின்றனர். உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் இந்திய ரயில்வே ஒன்றாகும். தினந்தோறும் சுமார் 13,000 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்களில் உணவை கட்டணம் செலுத்தி வாங்குகிறோம். ஆனால் ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு இலவச உணவை வழங்கும் ஒரு சிறப்பு ரயில் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இலவச உணவை வழங்கும் ரயில் எது? அதுதான் சச்ச்கண்ட் எக்ஸ்பிரஸ் (Sachkhand Express). இந்த ரயிலில் பயணிகளுக்கு முழு பயணத்திலும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இது அதன் பாதையில் உள்ள ஆறு நிலையங்களில் பயணிகளுக்கு இலவசமாக உணவு (லங்கர்) வழங்குகிறது. மற்ற ரயில்களில் பயணிகள் தங்கள் உணவுக்கு பணம் செலுத்த வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று நேரமும் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இது சமூக சமையலறை மூலம் சாத்தியமாகிறது. மேலும் பயணிகள் எந்த அவசரமும் இல்லாமல் உணவைப் பெறும் வகையில், ரயில் நீண்ட நேரம் நிறுத்தப்படுகிறது. ரயில் பயணிகள் தங்கள் சொந்த பாத்திரங்களைக் கொண்டு வந்து இலவச உணவைப் பெறுகிறார்கள். இதில் பருப்பு மற்றும் சப்ஜி போன்ற சைவ உணவுகள் அடங்கும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்