திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி திருநாவுக்கரசர் இன்று திருச்சியில் உள்ள அருணாச்சலம் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் ராகுல் காந்தி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நுழைந்தது பாஜகவிற்கு ஆட்டம் கண்டுள்ளது. அதானி எப்படி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, எல்ஐசி போன்ற நிறுவனங்களில் இருந்து எவ்வளவு கடன் தரப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை தொடர்ந்து நாடாளுமன்ற தொடரை நடத்த விடாமல் தடுத்தனர். நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் ,அமைச்சர்களே எழுந்து கோஷங்கள் எழுப்பிய நிலையில் பல்வேறு தடைகளை மீறி நாடாளுமன்றத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஜாயிண்ட் பார்லிமென்டரி கமிட்டி அமைப்பதற்கு மத்திய அரசு பயப்படுகிறது. இந்த கமிட்டி மூலம் எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் கடன் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முழுமையாக தரப்படுவதால் மத்திய அரசு பயப்படுகிறது. பா.ஜ.கவில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்பிக்கள் பல ஆண்டுகளாக இன்றும் அரசாங்கம் கொடுத்த வீட்டில் குடியிருக்கும் போது அவசரம் அவசரமாக ராகுல் காந்தி குடியிருந்த வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து ராகுல் காந்தி மீது மத்திய அரசு பல்வேறு காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எனவே காங்கிரஸ் அதை, ஒன்று சட்ட ரீதியாக அணுகும். அரசியல் ரீதியாக போராட்டங்கள் மூலமும் எதிர்கொள்ளும். பாராளுமன்றத்தில் பலமுறை போராட்டம் நடத்தப்பட்டது. தெருக்களில் இறங்கி போராடி வருகிறோம். போராட்டங்களுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடர்தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மூன்று மாதங்களுக்கு பிறகு தான் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கும். தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் கையெழுத்திடாமல் உள்ளார். எனவே தமிழ்நாடு முழுவதும் அணி திரண்டு வந்து ஆளுநரை கண்டித்து 12 ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பாஜகவை கண்டித்து 15ஆம் தேதி மத்தியஅரசு அலுவலகங்களுக்கு முன்னால் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட அளவில் ஒன்றிய அளவிலும் போராட்டங்கள் நடைபெற உள்ளது. அரிஸ்டோ ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும். தமிழக முதல்வருக்கு திருச்சியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு கடிதம் எழுதியிருந்தேன் . அந்தப் தொழில்நுட்ப பூங்கா அமைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் அதுபல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என்பதால் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்பிஎப் தேர்வானது அந்தந்த மாநிலங்களில் உள்ள அலுவலக மொழியில் இருந்தால் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இதை தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார் நானும் அதை ஆதரிக்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கு அதிமுகவை விட்டால் கூட்டணி கிடையாது. அதிமுகவுக்கும் பல பிரச்சினைகள் இருக்கிறது பாஜகவிற்கும் பல பிரச்சனை இருக்கிறது எனவே இவர்கள் ஒருவரை ஒருவர் ஒருபோதும் விட்டு பிரிந்து செல்லவே முடியாது.இதில் யார் கூட்டணியை முறித்துக்கொண்டாலும் பாஜக நடுத்தெருவில் தான் நிற்கும் என்றார்.