Rock Fort Times
Online News

என் சாவுக்கு இவங்க தான் காரணம் – கடிதம் எழுதிவைத்துவிட்டு கபடி வீரர் தற்கொலை…

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்த பரிமளம் என்பவரது மகன் அருணாச்சலம் (வயது 28). கபடி வீரரான இவர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடக்கும் கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாக இவருக்கும், பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள செட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் பகவதிக்கும் (25 ) திருமணம் நடந்தது. கபடி மட்டுமின்றி அவ்வப்போது வியாபாரமும் செய்து வந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது தொழில் ரீதியாக மனைவியின் தந்தை பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாக கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது இறப்பிற்கு இவங்க தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, பின்பு தனது மனைவி குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு விஷத்தை குடித்து விட்டார். வீட்டில் மயங்கி கிடந்த அருணாச்சலத்தை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் ப்ரோ கபடி லீக் போட்டிகளில் ஜெய்ப்பூர் அணியில் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்