திருச்சி, அம்மா மண்டபம் பகுதியில் ஏப்ரல் 17 முதல் 24 வரை மாலை நேரங்களில் குடிநீர் வினியோகம் இருக்காது- மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்…!
திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை பகுதியில் உள்ள ஆரக்குழாயில் மண்துகள்கள் அடைத்துள்ளதால் அதனை அகற்றும் பணி நாளை (17.04.2025) முதல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகர், பாலாஜி அவன்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மாலை நேர குடிநீர் விநியோகம் 17 முதல் 24 வரை இருக்காது. காலை நேர குடிநீர் விநியோகம் வழக்கம் போல் நடைபெறும். 25ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.