அஃகேனம் திரைப்படத்தில் 3 முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கும்… * திருச்சியில் நடிகர் அருண்பாண்டியன் தகவல்!
நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் இவரது மகள் கீர்த்தி பாண்டியன், ஆதித்யா, ரமேஷ் திலக், சி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் அஃகேனம்.
ஜூலை 4ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு இன்று ( ஜூலை – 5 ) திருச்சி எல்.ஏ.சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், இயக்குனர் உதய், இசையமைப்பாளர் பரத் வீரராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் அருண்பாண்டியன் கூறுகையில், அஃகேனம் திரைப்படம் 3 முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இப்போது திரைத்துறையில் அறிமுகம் ஆகும் இளைஞர்கள் பலரும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் இப்படத்தின் இயக்குனரான உதய். இவர் சொன்ன கதையும், கதைக்களமும் எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் இப்படத்தை தயாரிக்க நான் உடனடியாக ஒப்புக்கொண்டதோடு நடிக்கவும் சம்மதித்தேன். அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் பல்வேறு விஷயங்களை இதில் சொல்லி இருக்கிறோம். எல்லாரிடமிருந்தும் பாசிட்டிவ் ரிவ்யூகள் வருகிறது. தமிழகம் முழுக்க இன்னும் அதிகப்படியான திரையரங்குகளில் அஃகேனம் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்றார்.
Comments are closed.