சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு இண்டிகோ விமானம் ஒன்று இன்று (அக்.23) புறப்பட்டது. புறப்பட்டவுடன் அந்த விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக இந்த கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் அவதி அடைந்தனர். அவர்கள் மாற்று விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைக்க விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது. நீண்ட நேரத்திற்கு பின் பயணிகள் பிற்பகலில் திருச்சிக்கு மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.