இந்தியா கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை: திமுக -காங்கிரஸ் பற்றி பேச எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?- திருச்சியில் செல்வபெருந்தகை விளாசல்…!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை இன்று(24-10-2024) திருச்சி வருகை புரிந்தார். பின்னர் அவர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில்,பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அப்துல்சமது, சந்திரன் , பழனியாண்டி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் , மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்வபெருந்தகை கூறுகையில், 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு கண்ட்ரோலர் ஆப் ஆடிட்டர் ஜெனரல் தீயணைப்பு வாகனங்கள் தாமதமாக வாங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. அந்த வாகனங்களை மாற்றம் செய்யவில்லை. அதே வாகனத்தை பயன்படுத்துகின்றனர் என அறிக்கை கொடுத்திருக்கின்றனர். அதுகுறித்து விசாரணை நடத்தியிருக்கிறோம். சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் நான்கு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் ஒரு வாகனம் வாங்கப்பட்டுள்ளன.எங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. திமுக- காங்கிரஸ் கூட்டணி பற்றி பேசுவதற்கு எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழ் தாய் வாழ்த்து பாடியது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.