Rock Fort Times
Online News

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1.30 லட்சம் திருட்டு…! போலீசார் விசாரணை…

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த மாவிலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் கரூர் அரசு பஸ் டெப்போவில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று முசிறியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்து அந்த பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தார். சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜேந்திரன் முசிறி அருகே உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கினார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.30 லட்சம் திருட்டுப் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முசிறி போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்