திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள சிறுகளப்பூர் பகுதியை சேர்ந்தவர் வேம்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வேம்புவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வேப்பூரை சுரேஷ், மருதமுத்து மகன் புண்ணியமூர்த்தி இருவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது.இதையடுத்து அவர்களிடம் திருடிய நகைக குறித்து போலீசார் விசாரித்தனர். அவ்விசாரணையில் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள எதுமலை பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வரும் ரவி என்பவரிடம் வழிப்பறி செய்த நகைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து திருட்டு நகைகளை வாங்கியவர் உட்பட இக்குற்றத்தில் ஈடுபட்ட அனைரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Next Post
Comments are closed.