திருச்சி பாத்திமாநகர் பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையா்கள் திருடி சென்றுள்ளனர். சுமார் ஒரு லட்சம் ரொக்கம், மற்றும் மளிகை பொருட்கள், பேன்சி பொருட்கள் , செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விராலிமலை போலீசார் பாத்திமா நகர் பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆள் நடமட்டுமில்லாத கடைகளை நோட்டமிட்டு, ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு மணிகண்டம் அருகே நாகமங்கலம் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . தொடர்ந்து அடுத்தடுத்த பகுதியில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொள்ளையர்களை விரைவில் பிடிக்க வேண்டும் என வியாபாாிகள், பொதுமக்கள் காவல் துறையினருக்கு கோாிக்கை வைத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.