Rock Fort Times
Online News

திருச்சி அருகே அரசு பள்ளியில் திருட்டு !

தமிழகம் முழுவதும் செயல்பட்டுவரும் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளி அலுவல் வேலையாக செயல்பட்டது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தண்டலையில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது தலைமையாசிரியை செல்வி வகுப்பறையை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த டிவி, லேப்டாப்,டேபிள், மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் உதவி ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தண்டலையை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் பாலாஜி என்ற நபரை போலீசார் செய்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்