Rock Fort Times
Online News

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீட்டுக்குள் புகுந்து ‘ஷாக்’ கொடுத்த வாலிபர் …!

சென்னையை அடுத்த நீலாங்கரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. நேற்று( செப்.19) மாலை வாலிபர் ஒருவர் விஜய் வீட்டுக்குள் புகுந்து சரசரவென மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (வயது 24) என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. அவர் எப்படி விஜய் வீட்டுக்குள் நுழைந்து மொட்டை மாடிக்கு சென்றார்? என தெரியவில்லை. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்த போலீசாா், மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவரது வீட்டிற்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது. அரசியலில் பிசியாக இருக்கும் விஜய் வீட்டுக்குள் வாலிபர் புகுந்த சம்பவம் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்