பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புகழ்பெற்ற இளம் நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்தார். பீகார், மதுபானி மாவட்டத்தில் பிறந்த டெல்லியில் வசித்து வரும் மைதிலி தாக்கூர் இந்தி, பெங்காலி, உருது, மராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தனது 14-வது வயதில் இருந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், பீகார் பொறுப்பாளருளான வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரை இவர் சந்தித்து பாஜகவில் இணைந்தார். என்.டி.ஏ கூட்டணியின் பீகார் பிரச்சாரத்திற்கு பாடகி மைதிலி தாகூர் மிகப்பெரிய ஊக்கமாக இருப்பார், மைதிலி அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் என்.டி.ஏ கூட்டணி கூடுதலாக 5 முதல் 8 இடங்களை மேலும் கைப்பற்ற முடியும் என்று பாஜக நம்பியது. நினைத்தது போலவே அவர் பீகார் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொகுதியில் களம் இறங்கிய அவர் ஆரம்ப முதல் முன்னிலை வகித்து வருகிறார். அதோடு பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.

Comments are closed.