Rock Fort Times
Online News

வெள்ளப்பெருக்கின் போது திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்த 2 உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் முடிவடையும்.. * ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பங்கேற்ற கூட்டத்தில் * மின்வாரிய அதிகாரி தகவல்..

திருச்சி, பிராட்டியூர் துணை மின் நிலையம், லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சி துணை மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து திருவானைக்காவல் துணை மின் நிலையத்தை இணைக்கும் வகையில், 1.10 லட்சம் மெகாவாட் திறன் கொண்ட 2 உயர் மின்கோபுரங்கள் திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரம் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த 2024-ம் ஆண்டு ஆக.1-ம் தேதி நள்ளிரவு கொள்ளிடம் ஆற்றில் 5 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2 கோபுரங்களும் சரிந்து விழுந்தன. இதனால் பிராட்டியூர், தச்சங்குறிச்சி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் மாற்றி, மாற்றி வழங்கப்பட்டது. ஆனாலும், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், கம்பரசம்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின் வெட்டும், குறைந்த மின்னழுத்த பிரச்சினையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் அதி உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மின்தொடரமைப்பு கழக கண்காணிப்பு பொறியாளர் மேரி மேக்டெலின் பிரின்சி நேரில் பார்வையிட்டார். பின்னர், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார். அதிகாரி பிரின்சி கூறுகையில், “கொள்ளிடம் ஆற்றுக்குள் ரூ.2.84 கோடி மதிப்பில் அதிஉயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் 2 கோபுரங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்