Rock Fort Times
Online News

தன்னை ஏமாற்றி பறித்த ₹ 33 லட்சத்தை பெற்று தரக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(06-01-2025) நடைபெற்றது. அப்போது திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த வள்ளி(58) என்ற பெண் தன்னை ஏமாற்றி 33 லட்சம் ரூபாய் பணம் பறித்த லால்குடியைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி, அபிஷேகபுரத்தை சேர்ந்த செல்லதுரை மனைவி சந்திரா ஆகியோரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தரகோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட காவல்துறையினர் அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இவ்வாறு செய்யக்கூடாது உங்களது கோரிக்கை குறித்து முறையாக அதிகாரியிடம் மனு அளிக்க வலியுறுத்தினர். அதன்பேரில், அவர் கோரிக்கை அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் கொடுக்க சென்றார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்