Rock Fort Times
Online News

திருமணமான 20 நாளில் புது மாப்பிள்ளை எடுத்த துயர முடிவு…

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 29 ). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் வயிற்று வலி அதிகமாகவே, வீட்டில் உள்ள மின்விசிறியில் பன்னீர்செல்வம் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வயிற்று வலி காரணமாக பன்னீர்செல்வம் தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 20 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்