Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள் 21,26,303…* ஆண்களை விட பெண்கள் அதிகம்!

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதி இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் இன்று வெளியிட்டார். புதிய பட்டியலின்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 26 ஆயிரத்து 303 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.இதில், 10 லட்சத்து 31ஆயிரத்து 354 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 94 ஆயிரத்து 642 பெண் வாக்காளர்களும் உள்ளனர். பிற பாலினத்தவர்கள் 307 பேர் ஆவர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: இறப்பு – 206 இடம் பெயர்வு – 13,930 இரட்டை பதிவு – 230 மொத்தம் – 14,366. வரைவு வாக்காளர் பட்டியலில் மாறுதல் சதவீதம் : + 4.37% அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி : ஸ்ரீரங்கம் 2,83,862 வாக்காளர்கள். குறைவான வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக : துறையூர் (தனி) – 2,09,011 மொத்த வாக்குச்சாவடி 2785. மக்கள் தொகை அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் வாக்கு சதவீதம் : 69.38% ஆக உள்ளனர். வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி, திமுக சார்பில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், அதிமுக சார்பில் பூபதி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், பிரியங்காபட்டேல், பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், திலீபன் ரமேஷ், முன்னாள் மண்டல செயலாளர் தமிழாதன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவா, சுரேஷ், ராஜா, தேமுதிக சார்பில் பிறவி, துணை செயலாளர் திருப்பதி, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வழக்கறிஞர் இளங்கோவன் உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்