“காக்கா முட்டை” இயக்குனர் வீட்டில் திருடிய தேசிய விருதை மீண்டும் வைத்துவிட்டு மன்னிப்பு கோரிய திருடர்கள்…
தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிகண்டன். இவர், ‛‛காக்கா முட்டை, கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி” போன்ற படங்களை இயக்கியவர். இவற்றில் காக்கா முட்டை, கடைசி விவசாயி படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது. இவரது மதுரை உசிலம்பட்டி வீட்டில் கடந்த வாரம் திருட்டு நடந்தது. அவரின் 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று(13-02-2024) மணிகண்டனின் உசிலம்பட்டி வீட்டில் பாலித்தீன் பையில் ‛‛அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு…” என குறிப்பிட்டு மன்னிப்பு கடிதத்துடன் இரண்டு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் திருடர்கள் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். இயக்குனர் வீட்டில் திருடியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.