அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார். இந்தநிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் செயல்பாட்டில் இருக்கும் நான்கு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக தங்கம் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரலாம் என சொல்லப்படுகிறது. சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ரூ.45 கோடி மதிப்பீட்டில் 5,640 எண்ணிக்கையிலான 8 கிராம் 22 காரட் தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் கொள்முதல் தொடர்பாக விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழக அரசின் ஒப்பந்தப் புள்ளி கோரும் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அக்.9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தப்புள்ளிகள் அக்.9-ம் தேதி மாலை 4 மணியளவில் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.