Rock Fort Times
Online News

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வங்கிக்கணக்கில் தலா ரூ.20 லட்சம் செலுத்தியது த.வெ.க….!

கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது. அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை உறவினர்கள் சிலர் உறுதி செய்தனர். இந்நிலையில் நம்மை விட்டு பிரிந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு தலைமை வேண்டுகோள் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்