ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் சங்கத்தின் 2025 – 2026ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று (01-07-2025) செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான புதிய தலைவராக எஸ்.முத்துக்குமரவேல், செயலாளராக டி.சி.விஸ்வநாதன், பொருளாளராக வி.தினேஷ் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்டம் 3000த்தின் எதிர்கால ஆளுநர் ஏ.லியோ பெலிக்ஸ் லூயிஸ் கலந்துகொண்டார். முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் வி.குணசேகரன், டாக்டர் ஏ.ஜமீர்பாஷா ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஹேமலதா, மாவட்ட உதவி ஆளுநர் பி.கெளரிசங்கர், கடந்த ஆண்டு நிர்வாகிகளான கே.ராம்தாஸ், ஆர்.சீனிவாசன், தரணி எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜெ.பிரேம்ஆனந்த், எம்.சிவராஜ், டி.சதீஷ்குமார், பி.லோகேஷ்பாபு, ஏ.ஆசைத்தம்பி, எஸ்.பி.கிருஷ்ண குமார், எஸ்.கஜேந்திரன், சி.பாலாஜி, அருண் பி.செரியன், பி.சத்தியசீலன், ஏ.ரவிச்சந்திரன், எஸ்.திவ்யபிரகாஷ், டி.திருநாவுக்கரசு, ஆர்.மதுசூதன்ராஜ், பி.மணிகண்டன், ஆர்.சுரேஷ், ஜி.கோகுல், ஐ.விமல்ராஜ், கே.பன்னீர்செல்வம், ஜெ.ஜெஸ்டின் ராஜ்குமார், பி.சாலைக்குமரன், என்.முத்துக்குமார், வி.அடைக்கலவன், கே.ரவிக்குமார், கே.பஷீர்அஹம்மது, வி.ரமேஷ், கே.எஸ்.சங்கர் கணேஷ், எஸ்.செந்தில்ராஜா, டி.மகேஷ், பி.சின்னைய்யா, ஜெ.விக்டர்பால்ராஜ், இ.அரவிந்தன், ஏ.பாண்டியநாதன், எம்.மோகன்குமார், சி.கோபிகிருஷ்ணன், டி.ராஜ்குமார், எஸ்.ரவிச்சந்திரன், கே.நாகராஜன்
ஆகியோர் இந்த ஆண்டிற்கான சிறப்பு குழுக்களின் தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலவச கழிப்பிட கட்டிடங்கள், மாணவர்களுக்கான ஸ்மார்ட் கிளாஸ் ரூம், புற்றுநோய் சிகிச்சை ஆகிய சிறப்பு திட்டங்களுக்கான தலைவராக தில்லை கே.மனோகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாகிகளுக்கு மிட்டவுன் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், பல்வேறு கிளை சங்கங்களிருந்து வந்திருந்த பொறுப்பாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் சால்வை அணிவித்தும், பூங்கொத்துகள், பரிசுகள் வழங்கியும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
Comments are closed.