Rock Fort Times
Online News

திருச்சி எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் குழுமம் குத்தகை பாக்கியில் ரூ.20 கோடியை தமிழக அரசுக்கு செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…!

திருச்சி காஜாமலை பகு​தி​யில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலின் குத்​தகை காலம் முடிவடைந்த நிலை​யில், அதை காலி செய்​யு​மாறு ஹோட்டல் நிர்​வாகத்​துக்கு சுற்றுலா துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்​யக் கோரி ஹோட்டல் நிர்​வாகம் சார்​பில், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்தார். இதையடுத்து தமிழக அரசு, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தடையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஹோட்டல் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 26) விசாரணைக்கு வந்தது. திருச்சியில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் நடத்தி வரும் ஹோட்டலின் குத்தகை பாக்கி ரூ.38 கோடியில் ரூ.20 கோடியை உடனே செலுத்தினால்தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்