விண் அதிர்ந்த கந்த கோஷம்..!- பங்குனி உத்திரத்தையொட்டி திருச்சி,வயலூர் முருகன் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன் !
திருச்சியை அடுத்துள்ள வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தென் தமிழகத்தில் புகழ்வாய்ந்த முருகன் தலங்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இது விளங்கி வருகின்றது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி,பங்குனி உத்திரமான இன்று குமார வயலூர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி மற்றும் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து இன்று இரவு முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்கிறார். . விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர்.இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் அதிகாலையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.