தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று( ஜன. 20) தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் அவை கூடுவது வழக்கம். அதன்படி இன்று சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். இந்தநிலையில்,
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆளுநர் உரையாற்றும் போது மைக் ஆஃப் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் ஆளுநரை உரையாற்ற விடவில்லை. உரையில் ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மக்களை பாதிக்கும் பல முக்கிய பிரச்சினைகள் உரையில் விடுபட்டிருந்தன. 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என பலமுறை உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றிருந்தது. பெரும்பாலான ஒப்பந்தங்கள் காகிதங்கள் அளவிலேயே உள்ளன. இளைஞர்களின் ஏதிர்காலத்தை சீரழிக்கும் போதை மருந்து விவகாரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து துறை ஊழியர்களிடம் அதிருப்தி நிலவுகிறது. போதை காரணமாக ஓராண்டில் 2 ஆயிரம் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் நிலவும் நிர்வாக குளறுபடிகளினால் லட்சக்கணக்கான பக்தர்கள் மனம் புண்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது

Comments are closed.