Rock Fort Times
Online News

திருச்சியில் கொளுத்திய வெயிலை குளிர்வித்த மழை…!

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. திருச்சியில் 110 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வந்தது. இதன் காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே வெளியிடங்களுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வியர்வையில் குளித்து வருகின்றனர். வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க இறைவன் வழிகாட்ட மாட்டானா? என்று தவித்த மக்களுக்கு விமோசனம் கிடைத்தது. நேற்று புறநகர் பகுதிகளில் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக சமயபுரத்தில் 65 மில்லி மீட்டர், தேவி மங்கலத்தில் 47 மி.மீ, முசிறி 56 மி.மீ., துறையூர் 19 மி.மீ.என மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 282.1 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்