முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 38வது நினைவு நாள் இன்று (24-12-2025) அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதில் எதிரிகளும், துரோகிகளும் தீட்டும் திட்டங்கள் பலிக்காது. அதிமுகவின் வெற்றியே நமது இலக்கு. மக்கள் துணையோடு எம்.ஜி.ஆர் உருவாக்கிய உண்மை ஜனநாயகத்தை எந்நாளும் காப்போம். எம்.ஜி.ஆரின் புரட்சி வழியை பின்பற்றி மக்கள் தொண்டாற்ற மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Comments are closed.