திருச்சி கே.எம்.சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி…!
திருச்சி, நவலூர் குட்டப்பட்டு அருகே அமைந்துள்ள கே.எம்.சி. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவர்களின் தீபம் ஏற்றுதல் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று(23-12-2025) காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக திருச்சி அம்மன் ஸ்டீல் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.சோமசுந்தரம் பங்கேற்று குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார். திருச்சி காவேரி மருத்துவமனை தலைமை ஆலோசகர் மற்றும் இருதயநோய் நிபுணர் டாக்டர் எஸ்.அரவிந்த்குமார், திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் மற்றும் நர்சிங் டீன் டாக்டர் எஸ். ராஜாமணி ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவில் காவேரி மருத்துவமனை துணை நிறுவனர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் செங்குட்டுவன் தலைமை உரையாற்றினார். முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜாத்தி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் 240 மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர். இதில், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.