திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகாம்பூரில் நடைபெற்ற உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் சென்று இருந்தார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த திவாகர் என்பவரை கைது செய்தனர். திருட்டு போன 24 மணி நேரத்தில் திருடனை கைது செய்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Comments are closed.