கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் வண்ண விளக்குகள், மலர் அலங்காரங்களால் கயிலாயம் போல காட்சியளிக்கிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீப பெருவிழா இன்று (3-12-2025) கோலாகலமாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சுமார் 2600 அடி உயர மலை மீது பக்தர்களின் சரண கோஷத்துக்கு இடையே மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கோவிலில் குவிந்துள்ளனர். அதையொட்டி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Comments are closed.