Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை…!

திருச்சி மாவட்டம்,  முசிறி வெள்ளாளப்பட்டியில்  எம்ஐடி பாலிடெக்னிக், மகளிர் கலை அறிவியல் கல்லூரி, எம்ஐடி வேளாண்மை பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  சுவாமி ஐயப்பன் எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இந்த கல்வி நிறுவனங்கள்  செயல்படுகின்றன.  இந்த கல்வி நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  இந்நிலையில்  இந்த கல்வி நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  சென்னை, திருச்சியைச் சேர்ந்த வருமானவரித்துறையினர் 8 பேர் அடங்கிய குழுவினர் கல்லூரி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இதேபோல,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான  இளங்கோவன் உறவினர் கோவையில் வசித்து வருகிறார்.  அவரது வீடு  மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு  வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரின் கல்வி  நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்