Rock Fort Times
Online News

திருச்சியில் விவாஹா தங்க மாளிகை திறப்பு விழா கோலாகலம்…- அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!

திருச்சி, சாஸ்திரி ரோட்டில் விவாஹா தங்க மாளிகை திறப்பு விழா நேற்று (நவ.30) கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் முன்னிலை வகித்தார். விழாவிற்கு வந்தவர்களை விவாஹா தங்க மாளிகை உரிமையாளர்கள் சீனிவாசன், சிவசங்கரி ஆகியோர் வரவேற்றனர். விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தங்க மாளிகையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கொங்கு வெள்ளாள கவுண்டர் பேரவை மாநில தலைவர் ஆர்.தேவராஜன், டி.பழனியம்மாள் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். திருச்சி எம்.ஆர்.ஜி. பஸ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் எம்.ஆர்.ஜி. செல்வராஜ் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில், தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் பி.சபரிநாத், திருச்சி சுபாஹா பெட்ரோல் பங்க் பி.கே.தியாகராஜன், தமிழ்நாடு பஸ் அசோசியேசன் செயலாளர் டி.ஆர். தர்மராஜ் மற்றும் தொழில் அதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில், திருச்சியின் தங்க தேவஸ்தானம் என்று கூறப்படும் இந்த நகைக்கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு வருகிற ஐந்தாம் தேதி வரை தங்கம் கிராமுக்கு ரூ.200-ம், வைரம் ஒரு கேரட்டிற்கு ரூ.15,000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி நகை சேமிப்பு திட்டங்கள், தங்க பத்திரம், தங்க பெட்டகம் போன்ற திட்டங்களும் உள்ளன என்று கூறினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்